நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை: மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவிப்பு

,வெளியிடப்பட்டது
நன்றி தமிழ் இந்து இணையதளம்:

மு.யுவராஜ்
சென்னை 
நிதி ஒதுக்கி ஓராண்டாகியும் சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் தொடங்கவில்லை. இதனால், கணினி தொடர்பான கல்வியை பெற முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 76 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 21 அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து கணினி, மேஜை மற்றும் நாற்காலி உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வாங்க ரூ.83 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சி வழங்க கணினி தொழிற் பயிற்சி ஆசிரியர்களை தொகுப் பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட ரூ.36 லட்சம் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ரூ.1 கோடியே 19 லட்சத்து 78 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல் படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், கணினி படிப்பை படிக்க முடியாமல் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவி கள் தவிக்கின்றனர். இதுதொடர் பாக, ஆசிரியர்கள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:
கணினிகள் இல்லாத காரணத் தால் கணினி அறிவியல் பாடப் பிரிவை எடுத்த மாணவர்கள் கூட புத்தகத்தில் இருப்பதை மனப் பாடம் செய்துதான் தேர்வை எழுதி வருகின்றனர்.
கணினி தொழிற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காததால் சம்பளத்துக்காக ஒதுக்கிய ரூ.36 லட்சமும் கடந்த ஆண்டுக்குள் பயன்படுத்தாத காரணத்தால் மீண்டும் அரசுக்கே சென்றுவிட்டது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தங்களது சொந்த பணத் தில் ஆட்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கணினிகள் வந்தன. இருப்பினும் அவை அட்டை பெட்டிக்குள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. அதிகாரி களின் அலட்சியத்தால் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கணினி பாடம் நடத்த முடிய வில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கணினிகளை வழங்கும் பணி எல்காட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிறப்பு பள்ளிகளுக்கு கணினிகளை அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலுக்காக தேர்தல் நடத்தை விதி காரணமாக கணினிகளை வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கணினி தொழிற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்காததால் அரசுக்கு பணம் திரும்பிச் சென்றது உண்மைதான். இருப்பினும், ஆசிரியர்களை நியமிக்கும்போது அரசிடம் இருந்து பணம் பெறு வதில் எந்தச் சிக்கலும் இருக்காது. விரைவில் கணினி ஆய்வகம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்” என்றார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்