சிறப்புப் பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வு! அமைக்கப்பட்டது ஆசிரியர்கள் அடங்கிய குழு

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களை உள்ளடக்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை சுமார் 20 நாட்கள் மாற்றுப்பணியில் ஆணையரகம் சென்று கோரிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 21 அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பல ஆண்டுகளாகவே பதவி உயர்வு, பணியிட மாறுதல் என எதுவுமே வழங்கப்படவில்லை. இந்நிலையில், நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்ட சிறப்புப் பள்ளிகள் தொடர்பான கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு, ஐந்து ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரால் அந்த ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணியில் ஆணையரகம் செல்ல ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணை அப்படியே இங்கே,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்
சென்னை –5
ந.க.எண். 5585 ./சிப /2019
நாள் 06- 08-2019 பொருள்–பணியமைப்பு….மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை-5-சிறப்பு
பள்ளிகள் பிரிவு….அரசு சிறப்புப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளு
தல் – அரசு சிறப்பு பள்ளியில் 5 ஆசிரியர்கள் 08-08-2019 முதல் 28-08-2019
பெ
வரை இவ்வாணையாக பணிக்கு ஆஜராக தெரிவித்தல் 1. தலைவர் திரு.என்.சி.ஸ்ரீதர் சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சங்கம் எண்.4
கணபதி நகர் மேற்கு தஞ்சாவூர் –613001 விண்ண ப்பம் நாள் 05-08-2019 2. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் சிறப்பினமாக வழங்கப்பட்ட
நாள் 05-08-2019 3. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் அனுமதி வழங்கப்பட்ட நாள்
06-08-2019
பார்வை-1ல் கண்டுள்ள சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் சங்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கீழ் இயங்கும் பார்வைத்திறன் செவித்திறன் குறையுடையோர் மனவளர்ச்சிக்குன்றியோர் பள்ளி மற்றும் கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் விவரம்
1) அரசு சிறப்பு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல். 2) அரசு சிறப்பு பள்ளிகளில் 6 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் – பணி நியமனம் செய்தல் 3) அரசு சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணியிட இ மாறுதல் செய்தல் மற்றும் பதவி உயர்வு வழங்குதல். 4) அரசு சிறப்பு பள்ளிகளில் சிறப்பாசிரியர் பணிக்கான கல்வித்தகுதியினை பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களுக்கு (JDTD/SDTD/ B.Ed) என மறுவரையறை செய்யக் கோருதல். 5) அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பதில் பயன்படுத்துவது குறித்து
பணியிடைப்பயிற்சி வழங்கக் கோரல்
6) அரசு சிறப்பு பள்ளிகளில் கணினி ஆய்வகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கணினி
ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துணை விடுதிக்காப்பாளர்கள் இளநிலை உதவியாளர் ஆயா சமையலர் இரவுக்காவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்ப கோருதல். 7) சேலம் மற்றும் கடலுார் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளிகளுக்கு
சொந்த கட்டிட வசதி செய்து தரக்கோருதல்.
பார்வை 2 மற்றும் 3ல் கண்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் அனுமதியின்படி சிறப்பாசிரியர் சங்க கோரிக்கைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக செவித்திறன் குறையுடையோர் பார்வைத்திறன் குறையுடையோர் மனவளர்ச்சிக்குன்றியோர் அரசு சிறப்பு பள்ளிகளில் நிர்வாக ஈடுபாடுள்ள 5 ஆசிரியர்களைக் கொண்டு இவ்வாணையரகத்தில் ஆஜராகி பணிகளை விதிமுறைகளின்படி பரிசீலித்து கோப்புகளை பட்டியலிட்டு தயார் செய்து துரித நடவடிக்கை மேற்கொள்ள 08-08-2019 முதல் 28-08-2019 வரை பணிகள் முடிக்க மாநில ஆணையரால் அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே சிறப்பாசிரியர்கள் சங்க கோரிக்கைகள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக அரசு சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் கீழ்க்காணும் 5 ஆசிரியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
வ.எண். ஆசிரியர் பெயர்
பதவி
பணிபுரிந்து வரும் பள்ளியின் பெயர்
1) திரு.கலியமூர்த்தி தலைமையாசிரியர்(பொ)
செவித்திறன் குறையடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர்
2) திரு.ஏ.செபஸ்தின்ராஜா இடைநிலை ஆசிரியர் செவித்திறன் குறையுடையோருக்கான
உயர்நிலைப்பள்ளி சேலம்.
3) திருமதி.ஜாக்குலின் லதா முதல்வர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி
4) திரு. சுரேஷ்குமார்
இடைநிலை ஆசிரியர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான
அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர்
* 5) திரு.வி. இளங்கோ முதுகலைப்பட்டதாரி – மனவளர்ச்சிக்குன்றியோருக்கான அரசு
பள்ளி தாம்பரம் சானிடோரியம் இவர்கள் இவ்வாணையரகத்தில் 08-08-2019 முதல் 28-08-2019 வரை காலங்களில் தவறாது மேற்குறிப்பிட்ட பணி மேற்கொள்ள அனுப்பி வைக்குமாறு ச அரசு சிறப்பு பள்ளி தலைமையாசிரியர்கள் – கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
(ஒம்) ப.மகேஸ்வரி
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்
பெறுநர்
| 1) திரு.கலியமூர்த்தி தலைமையாசிரியர்(பொ)
செவித்திறன் குறையடையோருக்கான
மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர் 2) திரு.ஏ.செபஸ்தின்ராஜா இடைநிலை ஆசிரியர்
செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி சேலம். திருமதி.ஜாக்குலின் லதா முதல்வர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான
தலைமையாசிரியர்கள் மூலமாக
அரசு மேல்நிலைப்பள்ளி பூவிருந்தவல்லி
4) திரு. சுரேஷ்குமார் இடைநிலை ஆசிரியர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர்
5) திரு.வி. இளங்கோ முதுகலைப்பட்டதாரி
மனவளர்ச்சிக்குன்றியோருக்கான அர பள்ளி தாம்பரம் சானிடோரியம்
நகல்-1)தலைமையாசிரியர்கள் செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர்
2) தலைமையாசிரியர் செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி சேலம்
3) பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி தஞ்சாவூர்/பூவிருந்தவல்லி
4) திட்ட அலுவலர் மனவளர்ச்சிக்குன்றியோருக்கான அரசு பள்ளி தாம்பரம் சானிடோரியம்
//உத்தரவின்படி//
2தர்
11
உதவி இயக்குநர் (சிப(பொ)

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்