செப்டம்பர் மாதத்தில் போராட்டம்: பட்டதாரி சங்கம் அறிவிப்பு

,வெளியிடப்பட்டது
பணிவாய்ப்புஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,

வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் இருந்து வென்றெடுப்பதற்காக நம் சங்கம் வருகின்ற செப்டம்பர் மாதம் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
அந்த போராட்டம் வழக்கம்போல் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட வடிவத்தை கொண்டிருக்கும். மேலே சொல்லப்பட்டுள்ள போராட்டத்தில் உண்ணாவிரத தியாகிகளாக பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் நம் சங்கத்தின் தங்களுடைய பெயரினை பதிவு செய்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்கள் தியாகமும்,  உங்கள் உழைப்பும் சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பயன்படும். என்பதை உணர்ந்து  போராட்டத்தில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.‌.
உண்ணாவிரதத்திற்கு பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 20 aug 2019 மாலை 6 மணிக்குள் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ உங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தியாகிகளாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள சில தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் :
சங்க தொலைபேசி எண் :044-48548628, 044-24348628
சங்க செயலாளர் தொலைபேசி எண் :7010838144

  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்