சிறப்புப் பள்ளிகளின் வேலைநாட்கள் தொடர்பான சுற்றறிக்கை

,வெளியிடப்பட்டது
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்
காமராஜர் சாலை சென்னை -5.
சுற்றறிக்கை
ந.க.எண். 5585
/சிப /2019
நாள் 16 07–2019
பொருள் — சிறப்புப்பள்ளிகள் பிரிவு… மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை
அரசு சிறப்புப்பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது.
பார்வை- மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநர் சென்னை
அவர்களின் சுற்றறிக்கை
கடித எண் 4853/சிப1/2017 நாள் 23-07-2018.
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு சிறப்பு பள்ளிகளின் நிர்வாக நலனை முன்னிட்டு கீழ்க்காணும்
டு கழக்காணும் நடவடிக்கைகள் இன்றியமையாததாகின்றன.
1) 2019-2020 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களின் பட்டியல் விவரம் தொடர் நடவடிக்கைக்காக இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
2) மாவட்ட ஆட்சியரால் சிறப்பு இனமாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் நேர்வில் அவ்வறிவிப்பினை முழுமையாக கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
3) பள்ளிக்கல்வித்துறையால் அறிவிக்கப்படும் ஆணைகளின்படியே பருவ விடுமுறை நாட்கள் குறித்தலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
4) கல்வித்துறையால் பின்பற்றப்படும் அரசு வெளியிட்டுள்ள பாடத்திட்டத்திட்டத்துடன் கூடுதல் கலைத்திட்டமும் அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்.
5) கல்வித்துறை அலுவலர்களால் நடத்தப்பெறும் ஆய்வுக்கூட்டங்களில் அனைத்து சிறப்பு பள்ளிகளின் தலைமையாசிரியர்/முதல்வர் ஆகியோர் லந்து கொள்ளும் சூழ்நிலையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
6) தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் தொடர்பான கற்றல் கற்பித்தல் முன்னேற்ற அறிக்கையை மாதந்தோறும் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் தவறாமல் இவ்வலுவலகம் அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
7)இப்பள்ளிகளின் மாதாந்திர செலவின அறிக்கையை அனுப்பவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
8)கல்வித்துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டதற்கான விவரங்களை தவறாமல் அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்படுகிறது.
9) ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் இவற்றின்’ பணி குறித்து முறையே வட்டார கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரால் நடத்தப்பெறும் மாதாந்திர மற்றும் இதர கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமன்றி – அக்கூட்ட முடிவுகளின் தொடர்ச்சியாக சிறப்பு பள்ளிகளில் எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளையும் கூட்டங்களில் இத்துறைப் பள்ளிகளுக்கு கல்வித்துறை மூலம் தேவைப்படுவனவற்றின் விவரங்களையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் இவ்வலுவலகம் அனுப்பவும் தெரிவிக்கப்படுகிறது.
10) காலாண்டு அரையாண்டு மற்றும் ஆண்டுத்தேர்வுகளுக்கான செயல்திட்டம் குறித்து கல்வித்துறை மூலம் கூட்டங்களில் பெறப்படும் அறிவுரைகள் முடிவுகள் அடிப்படையில் உண்மையான தொடர் நடவடிக்கைகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யவும் அதன் விவரத்ததை – இவ்வலுவலகம் அனுப்பவும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த 2019-2020 ம்கல்வி ஆண்டில் மாணவ/மாணவியர் நுாறு விழுக்காடு தேர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இணைப்பு… பட்டியல்.
(ஒம்) ப.மகேஸ்வரி
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர்.
பெறுநர்
1. தலைமை ஆசிரியர்
அனைத்து அரசு சிறப்பு பள்ளிகள் திட்ட அலுவலர் மனவளர்ச்சிக்குன்றியோருக்கான அரசு நிறுவனம் தாம்பரம் சானிடோரியம் சென்னை -47
அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள். 4. உதவி இயக்குநர் (சிப(பொ) மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை -5 5. .அனுமதிக்கோப்பு/உதிரி.
// உத்தரவின்படி//
24
994
உதவி இயக்குநர் (சிப(பொ)
 சுற்றறிக்கையைப் பதிவிறக்க
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்