காது கேட்கும் கருவிகள் 4 ஆயிரம் கொள்முதல்

,வெளியிடப்பட்டது
நன்றி இந்து தமிழ்த்திசை:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடிவு 
சென்னை 
தமிழகம் முழுவதும் 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் உள்ளனர். தேசிய அடையாள அட்டை வைத்துள்ள கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திற னாளிகளுக்கு மூன்று சக்கர சைக் கிள், பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு கருப்பு கண்ணாடி, பிரெய்லி கடிகாரம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோல், காதுகேளா மாற் றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் மூலம் காது கேட்கும் கருவிகள் வழங்கப் பட்டு வருகின்றது. இந்தநிலையில், 2019-20-ம் ஆண்டுக்கு காதுகேளா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க 4 ஆயிரம் காது கேட்கும் கருவி களை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காதுகேளா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ரூ.1 லட்சம் மதிப்பில் 4 ஆயிரம் காது கேட்கும் கருவிகள் கொள் முதல் செய்ய முடிவு செய்துள் ளோம். இதற்காக, டெண்டர் அறி விக்கப்பட்டுள்ளது. டெண்டரை தாக்கல் செய்ய அடுத்த மாதம் 9-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை டெண்டர் இறுதி செய்யப்பட்டு கொள்முதல் செய்வதற்கான பணிகள் இறுதி செய்யப்படும். அனைத்து மாவட் டங்களுக்கும் தேவைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும் என்றார். 
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்