அரசு சிறப்புப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு வாகனவசதி: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு

,வெளியிடப்பட்டது

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு செவித்திறன் குறையுடையோர் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளிகளில், 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் மாணவ/ மாணவிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் பொருட்டு, கடந்த மே மாதத்தில் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பாக சில ஆலோசனைகளை உள்ளடக்கிய கடிதம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரிடம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசு சிறப்புப் பள்ளிகளில் இந்தக் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட, அரசு சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களால் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
1. அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்தும் பொருட்டு அந்தந்த
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் உள்ள நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனங்களைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு நாள் வீதம் வரும் ஜூன் 2019 மற்றும் ஜூலை 2019 ஆகிய மாதங்களில் வீடு தோறும் விழிப்புணர்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. விழிப்புணர்வு பிரசாரத்திற்கு செல்லும் ஆசிரியர்களும் மேற்படி வாகனத்தினை வாரத்தில் ஒரு நாள் கொடுத்து உதவிட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3. அரசு சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை உயர்த்திட பிரபலமான செய்தி நாளிதழ்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் உதவியுடன் மாவட்ட மக்கள் தொடர்பு
அலுவலர் மூலம் செய்தியாக வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் பண்பலை வானொலி (F.M) ஆகியவற்றில் குறைந்தது ஒருமாத கால அளவிற்கு சேவை செய்தியாக ஒளி/ஒலி பரப்ப உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்பட வேண்டும்.
5. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்க்கும் நாள்
கூட்டத்தில் அறிவிப்பாக வெளியிடவும் அங்கு திரளும் மக்களிடம் விவரம் தெரிவிக்கவும் மற்றும் துண்டு அறிக்கை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே நடைமுறையை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்படும் மனு நீதி முகாமிலும் பின்பற்றப்பட வேண்டும். 6. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் திட்டங்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பங்களில் தொடர்புடைய மாணவ/மாணவிகளின் முகவரி கண்டு அங்கு நேரடியாக சென்று விவரங்களை கூறி சிறப்பு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்.
7. மக்கள் கூடும் பொது இடங்கள்/வாரச்சந்தை/வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றில் சிறப்பு பள்ளிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களை சேர்ப்பதின் அவசியத்தை துண்டு பிரசுரங்கள் மூலம் விநியோகிக்க வேண்டும். 8. மேற்படி செய்திதாள் / செய்தி/ உள்ளூர் தொலைக்காட்சி / பண்பலை வானொலி மற்றும் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றிற்கு விவரம் தயாரிக்கப்படும் போது பள்ளிகளின் சிறப்பு அவற்றிற்கு அரசு வழங்கும் உதவிகள் மற்றும் அதன் நன்மைகள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.
9. மேற்படி நடைமுறைகளை கடைபிடித்து சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை உயர்த்திய அறிக்கையை ஜீன் 25 மற்றும் ஜீலை 25 ஆகிய தேதிகளில் மேற்க்கொண்ட
நடவடிக்கை விவரங்களை உரிய படிவத்தில் ஆணையரகத்திற்கு அனுப்பிட வேண்டும் என தொடர்புடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள், முதல்வர் பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளி / அனைத்து : அரசு சிறப்புப்பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்