பணியிட மாறுதல் 2019-20 அரசாணை

,வெளியிடப்பட்டது

சுருக்கம் பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது.
———————————
பள்ளிக் கல்வி[ப.க.5(றுத் துறை
அரசாணை (1டி) எண்.218.
நாள் : 20.06.2019. திருவள்ளுவர் ஆண்டு 2050, விகாரி வருடம்,
ஆனி மாதம், 5-ம் நாள்.
படிக்கப்பட்டவை :
1. அரசாணை (1டி) எண்.403 பள்ளிக் கல்வித் [பக5(1) துறை, நாள் 29.05.2018. 2. அரசாணை (1டி) எண்.217, பள்ளிக் கல்வித் [பக5(1) துறை, நாள் 20 .06.2019, 3. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P.(MD.) No.23772/2018ல்
வழங்கப்பட்ட 13.03.2019 நாளிட்ட தீர்ப்பாணை. 4. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.7479/1/22/2019, நாள் 18.06.2019
********
ஆணை :
மேலே நான்கில் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து, ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொது மாறுதல் நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களிடையே, 2019-20 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல்கள் வழங்குவதற்கு கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு ஆணையிடுகிறது:
(1). பொதுமாறுதல்கள் வழங்க கீழ்க்காணும் அலகின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட
வேண்டும். (அ) தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளைப் பொறுத்தவரை (i) ஒன்றியத்திற்குள், நகராட்சிக்குள், மாநகராட்சிக்குள் முதலில் வழங்க
பரிசீலிக்கப்பட வேண்டும். (ii) வருவாய் மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம்
(iii)மாவட்டம் விட்டு மாவட்டம். (ஆ) அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை
(i) வருவாய் மாவட்டத்திற்குள் (ii) மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறுதல் வழங்க தகுதி வாய்ந்த அலுவலர்கள்: தொடக்கக் கல்வி இயக்ககம் | (i) பணிபுரியும் அனைத்து வகையான : மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள், ஆசிரியர் களுக்கும் ஒன்றியத்திற்குள் மாறுதல்
வழங்குதல் – (ii) மாவட்டத்திலுள்ள ஒரு ஒன்றியத் : முதன்மைக் கல்வி அலுவலர் திலிருந்து மற்றொரு ஒன்றியத்திற்கு
ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குதல். (iii) பணிபுரியும் ஆசிரியர்களுக்கு : இணை இயக்குநர் (நிர்வாகம்), மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் தொடக்கக் கல்வி இயக்ககம், வழங்குதல்
சென்னை –6.
பள்ளிக் கல்வி இயக்ககம் (i) மேல்நிலை, உயர்நிலைப் பள்ளித் ; முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையாசிரியர்கள்
மற்றும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் வருவாய் மாவட்டத்திற்குள் மாறுதல்
வழங்குதல் (i) மேல்நிலைப் பள்ளித் தலைமை 🙂 இணை இயக்குநர் (மேல்
ஆசிரியர்கள் மற்றும் முதுகலை நிலைக் கல்வி), பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு | இயக்ககம், சென்னை –6.
மாவட்டம் மாறுதல் வழங்குதல் – (ii) உயர்நிலைப் பள்ளித் தலைமை : இணை இயக்குநர் (பணியாளர்
ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொகுதி), பள்ளிக் கல்வி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் இயக்ககம், சென்னை –6. சிறப்பாசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு
மாவட்டம் மாறுதல் வழங்குதல் (iv) கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற் : இணை இயக்குநர் (தொழிற் )
கல்வி பயிற்றுநர் (வேளாண்மை ) கல்வி), பள்ளிக் கல்வி ஆகியோருக்கு மாவட்டம் விட்டு இயக்ககம், சென்னை – மாவட்டம் மாறுதல் வழங்குதல்
2. பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் ஆகிய இரண்டிலும் பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள், அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். 3. பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழுள்ள பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டும்போது ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிப்பணியிடங்களை (Surplus Posts without Teachers) சார்ந்த இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டு செல்வதோடு, அப்பணியிடங்களை கலந்தாய்வில் காண்பிக்கக் கூடாது. மேலும் அப்பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குதல் கூடாது.
4. பள்ளிக் கல்வித் துறையில் 6, 7, 8 வகுப்புகளில் காலியாகும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் ஒரு முறை பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் பெற்று பணியேற்றவுடன் அப்பணியிடம் தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் பணியிடமாகவே கருதப்பட வேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படும் போது அரசாணை எண்.171, பள்ளிக் கல்வி (எம்2) துறை, நாள் 18.8.2008 பத்தி-8ல் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டு விதிகளை மீறாமல் பணியிடம் நிரப்பப்பட வேண்டும்.
5. (1) பள்ளிக்கல்வி இயக்ககத்தில், உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும்
ஆசிரியர்களை மாவட்ட அளவில் பணிநிரவல் செய்த பின்னர் பொதுமாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் உபரி ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை ஒன்றிய அளவில்/ அதே மாவட்டத்திலுள்ள வேறு ஒன்றியங்களுக்கு பணிநிரவல் செய்த பின்னர் பொது மாறுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாவட்டங்களில் அனைத்து வகை ஆசிரியர் பணிநிலையிலும் 01.06.2019 அன்று ஏற்படும் காலிப் பணியிடங்களின் விவரப் பட்டியலை முதலில் முழுமையான வகையில் தயார் செய்திட வேண்டும். 1.6.1986 முன் நகராட்சி பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு காலியாக உள்ள நகராட்சிப் பள்ளிகளில் இவர்களுக்கு முன்கூட்டியே முதலில் வாய்ப்பளித்து பின் எஞ்சியுள்ள காலிப்பணியிடங்களை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
2018-2019-ஆம் கல்வியாண்டில், தொடக்கக் கல்வித் துறையில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு பணி நிரவல் செய்யப்பட்டவர்கள், தாய் ஒன்றியத்தில் (Parental Block) உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் பெற ஏதுவாக இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
(iv)
20
2019-2020ஆம் கல்வி ஆண்டில், உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும்போது முற்றிலும் கண்பார்வையற்ற (Total Blindness) அனைத்துவகை ஆசிரியர்கள், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995ன்படி 40 % மற்றும் அதற்கு மேலும் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ் பெற்றவர்கள், அவர்கள் விருப்பப்படியே தான் பணிபுரியும் இடத்திலேயே தொடர்ந்து பணி செய்ய முன்னுரிமை அளிக்கலாம். அவருக்குப் பதில் அப்பள்ளியில் அடுத்த பணியில் இளையவரை (Station Junior) பணி நிரவல் செய்ய வேண்டும்.
6. இணைப்பில் காணும் கால அட்டவணையில் உள்ள நாட்களில் மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல்கள் சார்ந்த நெறிமுறைகளுடன் கூடிய செய்திக் குறிப்பினை அனைத்து செய்தித் தாள்களிலும் முன் கூட்டியே வெளியிட வேண்டும்.
7. பொது மாறுதல் கோருவது சார்ந்த விண்ணப்பங்கள் பெறுவது தொடர்பான
அறிவுரைகள் தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் தனியாக வழங்க வேண்டும்.
8. சிறப்பு நிகழ்வு: இராணுவத்தில் வீரமரணம் அடைந்தவரின் மனைவி மற்றும்
01.06.2018க்குப் பின் கணவன் அல்லது மனைவி திடீரென்று விபத்திலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்திருந்தால், அத்தகைய ஆசிரியர்கள் குறித்த நிகழ்வுகளில் கலந்தாய்வு குறித்த விதிமுறைகளை கடைபிடிக்காமல் சிறப்பு நிகழ்வாக, மாறுதல்
வழங்கும் அலுவலர்கள் மாறுதல் வழங்கலாம். 9. (i) மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்று
ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும். (01.06.2019 அன்றைய நிலையில்). உதாரணமாக 2018-2019ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் 2020-2021 கல்வியாண்டு வரை மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது. இந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் பெறும் ஆசிரியர்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும். மாணவர்களது கல்வி நலன் மேம்படுத்தப்படும் என்கிற அடிப்படையில் இந்தக் காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது. இது மனமொத்த
மாறுதலுக்கும் பொருந்தும். (i) மனமொத்த மாறுதல்களைப் பொறுத்தமட்டில், பொது மாறுதல் கலந்தாய்வு
நாளன்று, மாறுதல் ஆணைகள் வழங்கப்பட வேண்டும். மனமொத்த மாறுதல் அடிப்படையில், மாறுதல் பெற்றவர்கள் மீண்டும் ஏற்கனவே
பணிபுரிந்த பள்ளிக்கே மனமொத்த மாறுதலில் செல்ல அனுமதிக்கப்படக் கூடாது. (iv) மனமொத்த மாறுதல் பெறுவதற்கு தற்போது பணிபுரியும் பள்ளியில் மூன்று
ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும். (01.06.2019 அன்றைய நிலையில்) தொடக்கக் கல்வித் துறை பள்ளிக் கல்வித் துறையில் ஏற்கனவே உபரி ஆசிரியர் பணியிடங்கள் (Surplus post with person) உள்ள நிலையில், அலகு விட்டு அலகு மாறுதல், மற்றும் பிற துறையினரின் துறை மாறுதல் பொது மாறுதலில்
பரிசீலிக்க இயலாது. (vi) தொடக்கக் கல்வி/பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி
ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை உபரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ள ஒன்றியம்/மாவட்டங்களுக்கு பிற ஒன்றியம்/ மாவட்டங்களிலிருந்து மாறுதல் / மனமொத்த மாறுதல் செய்தல் கூடாது.
(vii) புகாரின் அடிப்படையில் நிர்வாக காரணங்களுக்காக மாறுதல் செய்யப்பட்டவர்கள்,
கலந்தாய்வில் ஏற்கனவே பணியாற்றிய இடங்களை தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது.
(vi) மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், சிறப்புத் தேர்வு மற்றும் நேரடி நியமனம்
மூலமும் முறையாக நியமனம் செய்யப்பட்டு, பணிபுரிந்து வரும் கணினி பயிற்றுநர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் (வேளாண்மை ) ஆகியோருக்கும், ஏனைய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்/விருப்ப மாறுதல் வழங்குவதை போல் இவர்களுக்கும் பொது மாறுதல் வழங்கிட ஆணை வழங்க வேண்டும்.
10. ஒரு பணியிடத்திற்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரினால் கீழ்க்கண்ட
நெறிமுறைகளைக் கையாண்டு முன்னுரிமை வரிசையின் அடிப்படையில் பொது மாறுதல் ஆணை வழங்க வேண்டும் 🙁i) முற்றிலும் கண்பார்வையற்ற அனைத்துவகை ஆசிரியர்கள் (Total Blindness). (ii) 50% மற்றும் அதற்கு மேல் ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சான்றிதழ்
பெற்றவர்கள். (i) 40% மற்றும் அதற்கு மேலே ஊனமுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான
சான்றிதழ் பெற்றவர்கள். (iv) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ள பெற்றோர்
மற்றும் பெற்றோரை இழந்த மனவளர்ச்சி குன்றிய/ மாற்றுத் திறனாளி குழந்தைகளின் சட்ட ரீதியான பாதுகாவலர் (Legal Guardian) ஆசிரியர்களாக இருப்பவர்கள். (அவ்வாறு உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995ன்படி 40 % மற்றும் அதற்கு மேலும் ஊனம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான
மாவட்ட மறுவாழ்வு அலுவலரால் சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.) (v) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (Kidney Transplantation Surgery)
செய்தவர்கள் மற்றும் டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள். (vi) இருதய அறுவை சிகிச்சை மற்றும் மூளைக்கட்டி (Brain Tumor) அறுவை
சிகிச்சை செய்தவர்கள். (vii) கடுமையாக பாதிக்கப்பட்ட புற்றுநோயாளிகள். (vi) 01.06.2019 அன்றைய நிலவரப்படி, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியர்களாக
பணிபுரியும் இராணுவ வீரர்களின் மனைவி. (ix) விதவைகள் மற்றும் 40 வயதைக் கடந்த திருமணம் செய்து கொள்ளாத
முதிர்கன்னியர். (x) 01.06.2019 அன்றைய நிலவரப்படி, 5 ஆண்டுகளுக்கு கீழ் ஆசிரியர்களாக
பணிபுரியும் இராணுவ வீரர்களின் மனைவி. (xi) கணவன்/ மனைவி பணிபுரிபவர்கள் (Spouse Employed) – கணவர்
பணிபுரியும் இடத்தில் இருந்து மனைவி பணிபுரியும் இடமும் அல்லது மனைவி பணிபுரியும் இடத்திலிருந்து கணவர் பணிபுரியும் இடமும் 30 கி.மீ. சுற்றளவுக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தனித்தனியே வசிப்பதாகக் கருதி கணவன் மனைவி பணிபுரிபவர்கள் (Spouse employed) என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படலாம். கணவன்/மனைவி என்ற முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் கோரும் பணியிடமானது, கணவன் அல்லது மனைவி பணிபுரியும் மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். கணவன் மனைவி என்ற முன்னுரிமை, மைய அரசு, மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள்/அரசு சார்ந்த அலுவலகங்கள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கென அதிகாரமளிக்கப்பட்ட உரிய அலுவலர்களால் பணிச்சான்று வழங்கப்பட வேண்டும். இதில் மைய அரசு/ மாநில அரசு பொதுத்துறை என்ற பாகுபாடு
கிடையாது. (xii) ஒரே இடத்தில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அதற்கு மேலும் பணியாற்றிய
ஆசிரியர்கள். ( தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2019 அன்று ஐந்து ஆண்டு பணி முடித்தவர்கள்)
(iii)
(xii) மேற்குறிப்பிட்ட முன்னுரிமை இல்லாத இதர ஆசிரியர்கள். 11. மாறுதல் கலந்தாய்வு ( Transfer counselling) முறையில் ஆசிரியர்கள் பொது மாறுதலின் போது கீழ்க்காணும் நிபந்தனைகளையும் அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்:(1) மாறுதல் கோரும் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய
விண்ணப்பத்தில் முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். முன்னுரிமை (Priority) கோரும் ஆசிரியர்கள் அதற்கான சான்றிதழினை இணைக்க வேண்டும்.
மாறுதல் கோரிப் பெறப்படும் விண்ணப்பங்களில் குறிப்பிடப் பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வு நடைபெறுதல் வேண்டும். எந்த முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம், மாறுதல் ஆணையில் இடம் பெற்றிருக்க வேண்டும். மலைப்பாங்கான இடங்களில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல தயக்கம் காட்டுவார்கள் என்பதாலும், இதனால் இவ்விடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லாமலிருக்க, மலைச் சுழற்சி முறை (Hill Rotation) அரசாணை (நிலை) எண்.404, கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை, நாள் 25.5.1995ன் படி மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதே முறை இவ்வாண்டும் பின்பற்ற வேண்டும். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை ஆகியவற்றை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் அறிவிப்பாக வெளியிடவேண்டும். கலந்தாய்வு நடத்துவதற்கு அனைத்துவகை முன்னேற்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தொடர்பான இணை இயக்குநர்கள் கலந்தாய்வு மையங்களில் திடீர் சோதனை செய்து கலந்தாய்வு பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும். ) தொடக்கக்கல்வித் துறையைப் பொறுத்த வரையில், இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியாக இருந்தால் புதிய ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்பு தான், மாறுதல் பெற்ற ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
12. ஆசிரியர் பணியிட மாறுதல்கள், மாறுதல் கலந்தாய்வு (Transfer counselling)
முறையில் அவ்வாசிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி மாறுதல் செய்யப்படுவதால், மாறுதல் பயணப்படி வழங்கப்பட மாட்டாது.
13. அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப் பணியிடங்களில் பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமையாசிரியர் நியமிக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்ற நிலையில், ஆண் ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும்.
14. நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் (Administrative exigency) தகுதிவாய்ந்த
அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை எந்த நேரத்திலும் வழங்கப்படலாம்.
15. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அதன் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்/ முதுநிலை விரிவுரையாளர்/ விரிவுரையாளர்/இளநிலை விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள்/ இளநிலை விரிவுரையாளர்கள் ஆகியோரைப் பொறுத்தவரை மேற்கண்ட மாறுதல் நெறிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும்.
16. ஒவ்வொரு பணித் தொகுப்பிலும் 100 பணியிடங்களுக்கு மேல் காலியேற்படும் நிலையில் மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்.
17. அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் சார்பான பணி
மாறுதல் தொடர்பான நெறிமுறைகள் தனியே வழங்கப்படும்.
18. 2019-20ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கல்வித் தகவல் மேலாண்மை
(Educational Management Information System) இணைய தளம் மூலம் நடைபெறுவதால், ஆசிரியர்கள் மாறுதல் பெறும் போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் (Resultant vacancies) உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவதாலும், ஆசிரியர்களின் சுய விவரம் (Teachers profile) உடனுக்குடன் மேம்படுத்துதல் (update) செய்யப்படுவதால், அனைத்து பொது மாறுதல் பணிகளும் ஒளிவு மறைவற்றவாறு EMIS இணைய தளம் மூலம் செயல்படுத்தப்படுவதால், பார்வை (3)ல் காணும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.P.(MD.) No.23772/2018ல் வழங்கப்பட்ட 13.03.2019 நாளிட்ட தீர்ப்பாணையின் வழிகாட்டுதலின்படி, தீர்ப்பாணையினை செயலாக்கம் செய்யும் பொருட்டு, அனைத்து வகையான பணி மாறுதலும் EMIS இணைய தளம் மூலம் நடத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
2) இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின் அடிப்படையில் தெளிவான நடவடிக்கைகளை வகுத்து கள் அலுவலர்களுக்கு அனுப்பும்படி, தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஆளுநரின் ஆணைப்படி)
பிரதீப் யாதவ் அரசு முதன்மைச் செயலாளர்
பெறுநர் பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை –6. தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை –6. இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை –6. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்(SSA), சென்னை –6.
அரசு முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை –78. அரசு செயலாளர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சென்னை –9. அரசு செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-9, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, சென்னை –5. அரசு முதன்மைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சென்னை –9. நகல்:மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அலுவலகம், சென்னை –9. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அலுவலகம், சென்னை-9. பள்ளிக்கல்வித் (தொ.க1/பக 3/பக 2/வரவு-செலவு) துறை, சென்னை –9. அரசு முதன்மைச் செயலாளரின் முதுநிலைத் முதன்மைச் தனிச்செயலர்,
பள்ளிக் கல்வித் துறை, சென்னை –9. பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து பிரிவுகள், சென்னை –9. இருப்புக் கோப்பு.
// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
Rolvat hamuthu
பிரிவு அலுவலர்.
-6-S
ON நல ,
20 5.15
தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கான 2019-2020ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணிநிரவல், பொது மாறுதல் மற்றும்
பதவி உயர்வு கலந்தாய்வுக்கான கால அட்டவணை
வ. எண்
விவரம்
தேதி
பொது மாறுதல் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்தல்
21.06.2019 முதல் 28.06.2019 வரை
08.07.2019 முற்பகல் 08.07.2019 பிற்பகல் 09.07.2019 முற்பகல் 09.07.2019 பிற்பகல்
10.07.2019 முற்பகல்
10.07.2019 பிற்பகல்
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டத்திற்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – மாவட்டம் விட்டு மாவட்டம் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு | பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு – வருவாய் மாவட்டத்திற்குள்
| 11.07.2019 முற்பகல்
11.07.2019 பிற்பகல்
| 11.07.2019 பிற்பகல்
11. /
12.07.2019 முற்பகல்
12.07.2019 பிற்பகல்
13.07.2019 முற்பகல்
13.07.2019 பிற்பகல்
-2
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு |
| 14.07.2019 முற்பகல் – ஒன்றியத்திற்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு |
| 14.07.2019 பிற்பகல் – வருவாய் மாவட்டத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு –
15.07.2019 முற்பகல் மாவட்டம் விட்டு மாவட்டம் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
15.07.2019 முற்பகல் – மாவட்டம் விட்டு மாவட்டம் –
பிரதீப் யாதவ் அரசு முதன்மைச் செயலாளர்
// உண்மை நகல் //
Rawat home the
| பிரிவு அலுவலர் – 19
ON. Ima
– 20 6 –
பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கான
வ. எண்
2019-2020ஆம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை
கலந்தாய்வு – பதவி
நடைபெறும் நாள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை தலைமை 21.06.2019 முதல் ஆசிரியர்கள்/ஆசிரியர்கள் முதன்மைக் கல்வி | 28.06.2019 வரை அலுவலர் அலுவலகத்தில் சமர்பித்தல்
நகராட்சி / அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை 08.07.2019 ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி திங்கட் கிழமை மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் வருவாய் முற்பகல் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 08.07.2019 பதவி உயர்வு
திங்கட் கிழமை
பிற்பகல் (i) அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை | 09.07.2019
ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி, செவ்வாய் கிழமை மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு முற்பகல் மாவட்டம் மாறுதல்)
2) அரசு / நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை | 09.07.2019 ஆசிரியர்கள் பதவி உயர்வு |
செவ்வாய் கிழமை
பிற்பகல் 1) அரசு/நகராட்சிப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணி 10.07.2019 நிரவல் |
புதன்கிழமை
முற்பகல் 2) அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை /தொழிற் கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், | 10.07.2019 கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு புதன்கிழமை மாவட்டம்)
பிற்பகல் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை /தொழிற் 11.07.2019 கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு
வியாழக்கிழமை
-2
உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், 12.07.2019இசையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள்/இடைநிலை | வெள்ளிக் கிழமை ஆசிரியர்கள் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) அரசு / நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணி | 13.07.2019 நிரவல் |
சனிக்கிழமை | சிறுபான்மை மொழி / பாடம் பட்டதாரி ஆசிரியர்கள் (கல்வி | 15.07.2019 மாவட்டத்திற்குள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், திங்கட் கிழமை மாவட்டம் விட்டு மாவட்டம்)
பிரதீப் யாதவ் அரசு முதன்மைச் செயலாளர்
// உண்மை நகல் //
JOBமுX0 | பிரிவு அலுவலர் 2 5 ON. 18
20. 6.TS

  அரசாணையைப் பதிவிறக்க

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்