சிறப்புப் பள்ளிகளில் துரித கதியில் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சனைகள்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கு ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் முன்வைத்த கோரிக்கைகள்:

,வெளியிடப்பட்டது
ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் HELENKELLER ASSOCIATION FOR WELFARE OF THE DIFFERENTLY ABLED PERSONS (பதிவு எண்.48/2017) எண்.5, முத்தையால்ரெட்டி நகர், 2வது தெரு, ஆதம்பாக்கம், சென்னை - 88. - மின்ன ஞ்சல்; helenkellerassociationforwdap@gmail.com தலைவர் செயலாளர் பொருளாளர் U. சித்ரா K. செல்வம் V. சுப்பிரமணியன் 9655013030 9786513435 9043822751 துணைத்தலைவர் துணைச்செயலாளர் S, சுரேஷ்குமார் K.R.P, சரவணமணிகண்டன் 9585757661 9789533964 பெறுநர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், சென்னை - 5. கடித எண் : 5A/2019 நாள்: 22.05.2019. அம்மா , பொருள்: சிறப்புப் பள்ளிகளில் துரித கதியில் தீர்வுகாணப்பட வேண்டிய பிரச்சனைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருதல் - தொடர்பாக, எதிர்வரும் கல்வியாண்டில் சிறப்புப் பள்ளிகளில் உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டிய சில பிரச்சனைகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது என சங்கம் தீர்மானித்துள்ளது. அவை: 1. 2019 - 20 ஆம் கல்வியாண்டிற்கான 2,3,4,5,7,8,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனவே பார்வையற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், அந்தப் புத்தகங்களை பிரெயில் வடிவில் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுதல், 2. கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களை சிறப்புப் பள்ளிகளில் சேர்த்திட முயற்சிகளை மேற்கொள்ளத் தொடர்புடைய சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களைக் கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டுதல்,
graphic 3. பெரும்பாலான அரசு சிறப்புப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்ப் பணியிடங்கள் கூடுதல் பொறுப்பு என்ற பெயரில் பல ஆண்டுகளாகக் காலியாக வைக்கப்பட்டுள்ளன. பணிமூப்பு அடிப்படையில் தகுதியானவர்களைக்கொண்டு அந்தப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுதல். 4. பெரும்பாலான அரசு சிறப்புப் பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை விகிதம் சீரற்றுக் காணப்படுவதாலும், பல ஆசிரியர்ப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாலும் மாணவர்களின் கல்வி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. இதனைக் களையும் பொருட்டு, உடனடித் தீர்வாக பள்ளி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களைப் பணிநிரவல் செய்யவும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பிடவும் வேண்டுதல். 5. பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் சாந்தோம் மறுவாழ்வு விடுதியில் தங்கியிருக்கிற பார்வையற்ற மகளிரின் நலவாழ்வைப் பேணிட அரசு விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல் ISA. Wochita "SE IV க நலம் • ang lug 'தலைவர் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் - நலச் சங்கம். ஆதம்பாக்கம், சென்னை - 88. S /

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்