தமிழக அரசின் 75 விழுக்காடு பேருந்து கட்டண சலுகை

,வெளியிடப்பட்டது
page 1 24 117 +214 பர்ா 4 'பா 11 , 4+புரம் 4 வெல் ? சுருக்கம் சமூகநலம் - ஊனமுற்றோர் நலம் - அனைத்துவகை ஊனமுற்றோரும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து --- ஆணை வெளியிடப்படுகிறது. சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் (சந.4) துறை அரசாணை (நிலை) எண்.153 நாள் : 29.10.2008 திருவள்ளுவர் ஆண்டு 2039 ஐப்பசி திங்கள் 13-ம் நாள் படிக்க : 1. அரசாணை (நிலை) எண். 164, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள்: 13.5.1997 2. அரசாணை (நிலை) எண். 176, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் : 28.6.1995 மற்றும் அரசாணை (நிலை) எண்.315, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் : 13.12.1996. அரசாணை (நிலை) எண். 28, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் 25.1.1996 அரசாணை (நிலை) எண். 116, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள் : 25.9.2001 5. அரசாணை (நிலை) எண். 109, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, நாள்: 164 1997 6. அரசாணை (நிலை) எண். 233, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, நாள்: 3.12.2007. 7. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 19.8.2008 அன்று தனமுற்றோருக்கு அளிக்கப்பட்ட புதிய சலுகைகள் பற்றிய செய்திக் குறிப்பு. 8. ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கடிதம் ந.க. எண்.8246/ ஜன. !!- 4/2008, நாள் 22.8.2008. ஆணை . தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கட்டமைப்பின் நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் 19.8.2008 அன்று சந்தித்து, தங்களது கோரிக்கைகளை அளித்தார்கள். அப்போது ஊனமுற்றோர்
page 2 சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணைகள் வெளியிடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுப்புகளில் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணம் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பபண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும் என்பதும் ஒரு அறிவிப்பாகும். மேற்படி அறிவிப்பினை செயல்படுத்த தேவையான கருத்துருவினை முதன்மைச் செயலாளர்/ ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ளார். 2. முதன்மைச் செயலாளர் /ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலித்தப் பின்னர் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகைபோல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய சலுகை வழங்கியும், ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் 75 சதவீத பயணக் கட்டணச் சலுகைக்கான மொத்த தொகையும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையே ஈடு செய்யவும் ஆணையிடுகிறது. மேலும் இந்நிதியாண்டின் இறுதியில் போக்குவரத்துக் கழகங்கள் வழங்கும் பட்டியலின் அடிப்படையில் பயணச் சலுகை அளித்தமைக்கு ஈடு செய்ய 2009 - 2010-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை செய்ய உரிய கருத்துருவை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு முதன்மைச் செயலாளர்/ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
page 3 3. இவ்வாணை போக்குவரத்துத் துறை நிதித் துறை ஆகியவற்றின் அ.சா.எண்.8/செயலர் (போக்குவரத்து) நாள் 17.10.2008 மற்றும் 2894/ செயலர் (நிதி) IP/2008, நாள் 9.10.2008 -ன்படி அத்துறைகளின் ஒத்திசைவுடன் வெளியிடப்படுகிறது. (ஆளுநரின் ஆணைப்படி) நா.ச. பழனியப்பன், அரசு முதன்மைச் செயலாளர். பெறுநர் முதன்மைச் செயலாளர்/ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், சென்னை - 6. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், (ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வழியாக) அனைத்து மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர்கள், ( ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வழியாக) அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர்கள், ( ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் வழியாக) மாநில கணக்காய்வுத் தலைவர், சென்னை - 9/18/35 மாநில கணக்காய்வுத் தலைவர், சென்னை - 18/35 (பெயரில்) சம்பள கணக்கு அலுவலர், சென்னை - 5/35/79. நகல் தலைமைச் செயலகத்தின் அனைத்துத் துறைகள், சென்னை - 9. அனைத்துப் பிரிவுகள், சமூகநலம் (ம) சத்துணவுத் திட்டத்துறை, சென்னை - 9. இருப்புக்கோப்பு/உதிரி நகல். //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// ஒம்.-ஏ. டோரத்தி சுலோச்சனா, பிரிவு அலுவலர். //உண்மை நகல்/உத்தரவின்படி// தெளி பேச்சுப் பயிற்சியாளர்

அரசாணையைப் பதிவிறக்க
 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்