நன்றி இந்து தமிழ்த்திசை: மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள்

,வெளியிடப்பட்டது
தேர்தல் ஆணையம் நடவடிக்கை  ச.கார்த்திகேயன்  சென்னை  தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி களில் செய்யப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர் களாக தேர்தல் ஆணையம் நியமித் துள்ளது.  மாற்றுத்திறனாளிகளின் இயலாமை காரணமாக தேர்தலில் வாக் களிக்காமல் இருப்பது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து, அவர்களின் வசதிக்காக வாக்குச் சாவடிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறை, தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் விவரங்களை தேர்தல் ஆணையம் சேகரித்துள்ளது.  இந்த தேர்தலில் முதல்முறையாக, வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அதில், திருவள்ளூர் (தனி), வட சென்னை, தென் சென்னை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு தமிழ்நாடு மின்னாளுமை முகமை மேலாண் இயக்குநர் சந்தோஷ் கே.மிஸ்ரா, பெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர் ஆகிய தொகுதிகளுக்கு மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் அனில்மேஷ்ராம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி ஆகிய தொகுதிகளுக்கு தமிழக மின்சார நிதி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிறுவன தலைவர் சந்திர காந்த் பி.காம்ப்ளி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் ஆகிய தொகுதிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பி.ஜோதி நிர்மலா சாமி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி (தனி) கோவை ஆகிய தொகுதி களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் சி.விஜயராஜ்குமார் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி ஆகிய தொகுதி களுக்கு சிறு, குறு மற்றும் நடுத் தர தொழில்நிறுவனங்கள் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கு தமிழ்நாடு கைத் திறன் தொழில் வளர்ச்சிக் கழகத் தலைவர் பி.சந்தரமோகன், நாகப் பட்டினம் (தனி), தஞ்சாவூர், சிவ கங்கை, மதுரை ஆகிய தொகுதி களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலர் ஏ.கார்த்திக், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக் குடி ஆகிய தொகுதிகளுக்கு தொழில் மற்றும் வர்த்தகத்துறை ஆணையர் ராஜேந்திரகுமார், தென்காசி(தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதி களுக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களின் பணி குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:  மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்தின் நுழைவு வாயில் முதல் வாக்குச்சாவடி வரை தடையின்றி செல்லும் வகையில் உரிய இடத்தில் சாய்வு தளங்களை அமைத்து சீரான பாதையை ஏற்படுத்த வேண்டும். சாய்வு தளங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கைப்பிடிகள் அமைக்க வேண்டும். உரிய வழி காட்டி பதாகைகளை வைக்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு தகுந்த கழிவறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றை ஏற் படுத்த வேண்டும். சக்கர நாற்காலி, அதை இயக்குவதற்கான உதவி யாளர் இருக்க வேண்டும். வேட்பாளர்களின் பட்டியலை பிரெய்லி முறையில் அச்சிட்டு வைக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப் பதற்காக முதல் முறையாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.  இது தொடர்பாக மாற்றுத்திறனா ளிகள் உரிமை பாதுகாப்பு அமைப்பான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் மாநில பொதுச்செயலர் எஸ்.அண் ணாமலை கூறும்போது, “மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் பார்வை யாளர்களை நியமித்த தேர்தல் ஆணையத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த பார்வை யாளர்கள், சரியான அளவீட்டில் சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளதா, அவற்றுக்கு கைப்பிடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்