பார்வையற்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் யோகா பயிற்சி

,வெளியிடப்பட்டது
பார்வையற்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் யோகா பயிற்சி  புதுக்கோட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவர்களுக்கு வேதாத்திரி மகரிஷி அமைப்பின் பயிற்சியாளர் சத்தியபாமா யோகா பயிற்சியளித்தார். 2 வாரங்கள் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  பயிற்சியாளர்கள் செய்வதைப் பார்த்து மாணவர்களால் செய்ய இயலாததால் யோகா பயிற்சி அளிப்பது சவாலாக இருந்தது. எனினும், தொடர் முயற்சியால், யோகா பயிற்சியை மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.  இந்த பயிற்சியானது உடலுக்கு வலிமை அளிப்பதுடன், மன தைரியத்தையும் கொடுக்கும் என்பதால் கோடை விடுமுறையிலும் இப்பயிற்சியை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். பயிற்சி நிறைவு விழா நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை விசித்ரா தலைமை வகித்தார். வாசகர் பேரவைச் செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்