“பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்” கெ.கெ. மகேஷ் உருக்கம்: என்ன நடந்தது?

,வெளியிடப்பட்டது
graphic மாபெரும் தமிழ்க்கனவு நூலைக் கையில்  ஏந்தியபடி ப. சரவணமணிகண்டன்

பிரபல செய்தி ஊடகமான தி இந்து குழுமம், பேரறிஞர் அண்ணாவைப் போற்றும் வகையில், மாபெரும் தமிழ்க்கனவுஎன்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய கடந்த மார்ச் 15 அன்று அதிகாலையே நான் புத்தகத்தை இணையவாயிலாக முன்பதிவு செய்து காத்திருந்தேன்.

ஏப்ரல் நான்காம் தேதி என் கைகளுக்கு அந்த தடித்த புத்தகம் கிடைத்தபோது அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதேசமயம், தெற்கிலிருந்து ஒரு சூரியன்என்கிற அவர்களின் முந்தைய புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டதால் பல பார்வையற்றவர்கள் படித்துப் பயன்பெற்றோம். அதுபோலவே, இந்த புத்தகத்தையும் கிண்டிலில் வெளியிட வேண்டுமென எனது முகநூல் வழியாக கோரிக்கை வைத்தேன்.
நான் எனது முகநூல் பக்கத்தில், “800 பக்கங்கள் கொண்ட மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷத்தை, வாசிப்பாளர்களைத் தேடிப்பிடித்தேனும் வாசித்தாகவேண்டும் என்பதே எனது இப்போதைய பெருங்கனவு.
தரமான ஒரு வரலாற்று ஆவணத்தைத் தக்க தருணத்தில் வழங்கியிருக்கிற இந்து குழுமத்திற்கு உளமார்ந்த நன்றிகள்.
அப்படியே கோரிக்கை ஒன்று.
தங்களின் தெற்கிலிருந்து ஒரு சூரியன்புத்தகத்தை கிண்டிலில் வழங்கியதுபோல, இந்தப் புத்தகத்தையும் வழங்கினால், அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவோம்.எனக் குறிப்பிட்டிருந்தேன்.
graphic சமஸ்
 எனது இந்தப் பதிவினைக் கவனமாகப் படித்த சகோதரர் பழூரான் விக்ணேஷ் ஆனந்த் அவர்கள், இதனை இந்து தமிழ்த்திசையின் நடுப்பக்க ஆசிரியரான திரு. சமஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லுமாறு திரு. ரவிசங்கர் ஐயாக்கண்ணு அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவரும் உடனடியாக சமஸ் அவர்களிடமிருந்து நிச்சயம் செய்கிறோம்என்ற மகிழ்ச்சி தரக்கூடிய பதிலைப் பெற்றுத் தந்தார்.
graphic கெ.கெ. மகேஷ்
அதேவேளையில், எனது நண்பர் திரு. கா. செல்வம் அவர்கள், எனது பதிவை திரு. கெ.கெ. மகேஷ் அவர்களின் கவனத்திற்குஎனக் குறிப்பிட்டு,  தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்து தமிழ்த்திசையின் நிருபர்களில் ஒருவரும், இந்த புத்தக ஆக்கத்தில் பங்காற்றியவருமான திரு. கெ.கெ. மகேஷ் அவர்கள், நிச்சயமாக செய்கிறோம், பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாசிப்பார்வத்திற்குத் தலைவணங்குகிறோம்என உருக்கமாக பதில் அளித்திருந்தார்.
 திரு. சமஸ் மற்றும் கெ.கெ. மகேஷ் அவர்களுக்கு அனைத்துப் பார்வைமாற்றுத்திறனாளிகள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது இந்தக் கோரிக்கையின் நியாயத்தை உள்வாங்கிகொண்டு, அதை உரியவர்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் பழூரான் விக்ணேஷ் ஆனந்த், திரு. ரவிசங்கர் ஐயாக்கண்ணு அவர்கள், எனது இதுபோன்ற முயற்சிகளுக்கு எப்போதுமே தன் வழிகாட்டலையும் ஒத்துழைப்பையும் வழங்கிவரும் நண்பர்  கா. செல்வம், இந்த முகநூல்ப்பதிவிற்காகப் படங்கள் எடுத்துத் தந்துதவிய நண்பர்கள் செல்வராஜ் மற்றும் பாஸ்கர் என அனைவருக்கும் நன்றிகள்.
graphic நூலை சரவணமணிகண்டனுக்கு வாசித்துக் காட்டுகிறார் பாஸ்கர்
இருதியாக ஒன்று, படைப்பாளிகளே! பதிப்பாளர்களே! பார்வை மாற்றுத்திறனாளிகளாகிய நாங்களும் படித்துப் பயன்பெறும் வகையில், தங்களின் புதிய அச்சு வெளியீடுகளை ஒருங்குறி மின்னூலாகவோ, அல்லது ஒலிவடிவிலோ விற்பனைக்கு கொண்டுவந்து, வாசிப்புத் தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் சமபங்கேற்பை உறுதிசெய்ய வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு vaazhgavalluvam@gmail.com

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்