“ஊராட்சி ஒன்றியந்தோரும் ஒரு சிறப்புப் பள்ளி”. அதிரடிக்கும் சிபிஎம் தேர்தல் அறிக்கை:

,வெளியிடப்பட்டது
graphic சிபிஎம் கட்சியின் சின்னம்

இந்திய கம்னியூஸ்ட் கட்சி மாக்சிஸ்ட் தேசிய அளவில் வெளியிட்ட தனது தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான  சில அறிவிப்புகளை வழங்கியிருந்தது. அதுபோலவே, சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவும் தனது தேர்தல் அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலன் எனத் தலைப்பிட்டு, சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறது. அதன் விவரம் வருமாறு;
‘தேர்தல் அறிக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் )

தமிழ்நாடு மாநிலக்குழு
17 – வது நாடாளுமன்றத் தேர்தல்
தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள். ! மாற்றுத்திறனாளிகள் நலன்
பாகுபாடு பார்ப்பதை தடை செய்யும் அரசியல் சாசன பிரிவு 15 ( 1 ) ல் ” ஊனமுற்றோரை ” சேர்க்க வலியுறுத்துவது , அதைப்போன்று அரசு பணியமர்த்தலில் சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சாசன பிரிவு 16 (2)ல் ஊனமுற்றோரை ” சேர்ப்பது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா சூழல் உள்ளிட்ட சட்டபூர்வ அரசு கடைமைகளை செய்ய ஒவ்வொரு துறையும் தனது நிதிச்செலவினத்தில் 5 சதவீத நிதியை ஒதுக்கீடு செய்வது பொதுக்கல்வித்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புக் கல்வி – உள்ளடங்கிய கல்வியை உரிய கட்டமைப்பு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு சிறப்புப் பள்ளியை ஏற்படுத்துவது
மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களை வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களாக அறிவித்து , அரசுகளின் நலத்திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் நிபந்தனையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது
மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசுகளின் அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க நடவடிக்கை இவர்கள் மீதான பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து தாக்குதல்களையும் தடுத்திட நடவடிக்கைகள் எடுப்பது. மாற்றுத் திறனாளிகளுக்கு கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ; கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சட்டப்படியான 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்வது , மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையான சைகை மொழிக்கு அங்கீகாரம் வழங்குவது ; தனியார் துறை பணிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விலைவாசி உயர்வுக்கேற்ப உயர்த்தப்பட்டு தடையின்றி வழங்குவது.’ இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக தேசிய அளவில் வெளியிடப்பட்ட சிபிஎம் தேர்தல் அறிக்கையிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல குறிப்பிடத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை;

  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் மற்றும் இதர சட்டங்கள், ஐநாவின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் பிரகடனத்தின்படியும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளைக் கணக்கில்கொண்டு, திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் பெறுவது எளிமையாக்கப்பட்டு, ஒரே வகையான அனைத்து மாநிலங்களிலும் செல்லத்தக்கதான மாற்றுத்திறனாளிகள் அட்டை வழங்கப்படும்.

  • உரிய காலகட்டத்திற்குள் அனைத்துத் துறைகளிலும் காணப்படுகின்ற பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

  • அனைத்துக் கட்டடங்கள், பொது இடங்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற அனைத்தும் தடைகள் அற்ற, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் (fully access) உருவாக்கப்படும். செவித்திறன் மற்றும் பேச இயலாதோருக்காக, சைகை மொழியாக்குநர் (sign language interpreters) என்ற வசதி ஏற்படுத்தப்பட்டு, தொலைக்காட்சிகள் இயங்கும்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் 4000ஆக உயர்த்தப்படும்.

  • உதவி உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் இலவசமாக வழங்கப்படும்.

  • கல்வி அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதாக உருவாக்கப்படும்.

  • மருத்துவ வசதிகள்  இலவசமாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பெறும் வகையிலும் உருவாக்கப்படும்.

  • மக்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி விரிவுபடுத்தப்பட்டு, சர்க்கர நாற்காலிகள், மூன்று சர்க்கர மிதிவண்டிகள் மற்றும் செயற்கைக்கால்களுக்கு மட்டுமின்றி, இதர உதவி உபகரணங்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் சிபிஎம் தனது தேர்தல் அறிக்கையை, பார்வை மாற்றுத்திறனாளிகள் கேட்டுப் பயன்பெறும் வகையில் ஒலிவடிவிலும் வெளியிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்