“பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களியுங்கள்”. தமிழக வாக்காளர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு வேண்டுகோள்:

,வெளியிடப்பட்டது
graphic மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன், பி.எஸ். பாரதி அண்ணா, பேரா.தீபக், பி.மனோகரன், இ.கே. ஜமால் அலி உள்ளிட்ட தலைவர்களும், மருத்துவம், பொறியியல், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து செயல்பட்டு வரக்கூடிய பின்கண்ட மாற்றுத்திறனாளி பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
அப்போது நடைபெறவுள்ள
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது என்பதற்கு பின்கண்ட விளக்கங்களையும் தெரிவித்தனர்.
Ø ஒருபுறம் தெய்வப்பிறவிகள் என அறிவித்துவிட்டு, மறுபுறம் மாற்றுத்திறனாளிகளின் உதவி உபகரணங்களுக்குக்கூட கடும் ஜிஎஸ்டி வரியைப் போட்டு வாட்டியது மோடி அரசு!
Ø வரலாறு காணாத வகையில் மாற்றுத்திறனாளி நலன்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கியது பாஜக அரசு.
Ø மக்களை சுரண்ட, முகாம்கள் நடத்தி ஆதார் அட்டையை மக்கள் தலையில் திணித்தது மோடி ஆட்சி..! மாறாக, மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியமான பல்நோக்கு அடையாள அட்டை வழங்கக்கூட உறுப்படியாக நடடிவடிக்கை எடுக்க மறுத்தது!
Ø தடையில்லா சூழல், தகவல் களஞ்சியம், இணைய வழி கல்வி உள்ளிட்ட 2014 பாஜக தேர்தல் அறிக்கையில் தம்பட்டம் அடித்த மாற்றுத்திறனாளிகளுக்கான வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்ற மறுத்தது!
Ø அரசுத்துறைகளில், பின்னடைவு காலிப் பணியிடங்களையும், சட்டப்படியான 4 சதவீத இட ஒதுக்கீட்டையும் முழுமையாக வழங்க மறுத்தது பாஜக அரசு,
Ø கிராமப்புற 100 நாள் வேலையை குறைந்தபட்சம் 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ள போதும், இத்திட்டத்தையே மோடி அரசு ஒழிக்க முயற்சித்ததன் மூலம், இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பெற்ற பயன்களையும் பறித்தது மோடி அரசு!
Ø ஏற்கனவே பெற்றுவந்த உதவித்தொகைக்கும்கூட கடும் விதிமுறைகளை உருவாக்கி திணித்ததால், மாற்றுத்திறனாளிகளை மேலும் வறுமைக்கு தள்ளியது பாஜக அரசு!
Ø நீதிமன்ற உத்தரவு மூலம் கிடைக்கப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகளை, படிப்படியாக நாடு முழுவதும் பல ரயில்களில் இருந்து நீக்கியது மோடி அரசு. தனியான அடையாள அட்டையை இரயில்வே நிர்வாகம் திணித்து, அதே மத்திய அரசின் சட்டப்படியான பல்நோக்கு சான்றை அங்கீகரிக்க மறுத்து மாற்றுத்திறனாளிகளை துன்பத்துக்கு உள்ளாக்கியது!
Ø பொது வெளியில் மாற்றுத்திறனாளிகள் மனது நோகும்படி நக்கல் செய்வது, அவமானப்படுத்துவது, தாக்குவது உள்ளிட்ட செயல்களை செய்த.. நாட்டின் அவமானங்களாக பிரதமர் உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் திகழ்ந்தனர்.
Ø மதக் கலவரம் உண்டாக்கினால், போர் மூண்டால் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் உருவாவார்கள் என்ற அடிப்படையைக்கூட உணராமல் மதவெறியையும், போர்வெறியையும் உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேடும் ஆட்சியாக பாஜக அரசாங்கம் இருந்தது!
Ø மாற்றுத்திறனாளிகளிகளுக்கான ஐ.நா. கன்வென்ஷன் விதிமுறைகளையும், புதிய உரிமைகள் சட்ட விதிகளையும் அமல்படுத்த மறுக்கும் விதத்தில் அலங்கோல ஆட்சியாக தமிழகத்தில் அஇஅதிமுக உள்ளது!
Ø எனவே, நடைபெறவுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் மதவாத பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்க இதன் மூலம் வேண்டுகோள் விடுக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைப்புக்குழுவில் இடம் பெற்றோர் விபரம்.
1. Mrs. B. Jansirani, Women & Disability Rights Activist
2. Prof. T.M.N. Deepak, MSW., M.Sc(Lond), CIMH(Lond), Academician & Activist
3. Mr. P. Manoharan, B.A., Dip. In Rehab(Sweden), Dip. In Mgmt., Activist
4. Mr.E.K. Jamal Ali, Disability Rights Activist
5. Dr. Garimella Subramaniam, Phd., Senior Journalist & Thought Leader
6. Dr. Aishwarya Rao,MBBS, D.Ch. Public Health Specialist
7. Er.Tamil Iyalan, B.E., MA(Tamil), MA(Hindi), MA(English), Secy. “Min Ilakkiya Poonga”
8. Mr. Kotteeshwar Rao, M.S.W., M.Phil., Mental Health Activist
9. Adv. V. Natarajan, B.Sc., MSW, MBA, LLB, DCAA, Advocate, Madras High Court
10. Adv. Devan, M.Com., B.L., Advocate, Madras High Court
11. Adv. K.C. Karl Marx, B.Sc., B.L., Advocate, Madras High Court
12. Mr. Vijayasarathy, MBA, International Para-Athlete
13. Ms. S. Vasanthi, M.S.W., M.Sc.(Psy), Child Psychologist
14. Mr. Ganesh Muthuswamy, B.Sc., MBA, Leprosy Rights Activist
15. Mr. S. Rafiq Ahamed, M.C.A., Sr. Software Engineer
16. Mr. Harishanthan, Short Film Director, International Para Photography Award Winner(Tokyo)
17. Mr. P. Antony Kumar, M.A., M.B.A., D.Lit., Academic & Musician
18. Mrs. Lakshmi Balakrishnan, MCA, B.Ed.(Spl Education), Writer
19. Adv. B. S. Bharathi Anna, B.Com, B.L., Advocate & Activist
20. Mrs. C.K. Mano Ranjani, B.E.(ECE), Parent & Activist
21. Mr. B. Radhakrishnan, B.A.(Psy), DSE(MR), Special Educator & Activist
22. Mr. S. Namburajan, B.A.(Psy), DSE(MR), Special Educator & Activist

  வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்