மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் குறிப்பிட்ட மத வழிபாடு! தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!

,வெளியிடப்பட்டது
graphic டாராட்டக் சங்கக் கடிதம்

சென்னை:
மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில், கடந்த மார்ச் 13 அன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், எனவே, அதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம், மாநில தேர்தல் ஆணையருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. அந்தக்கடிதம் இதோ!
“அன்புடையீர் வணக்கம்.

பொருள்: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வேளையில்
மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையரகத்தில் குறிப்பிட்ட மத வழிபாடு!
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை !!
சென்னை, மெரினா கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அலுவலகத்தில் நேற்று மார்ச் 13) ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த புரோகிதர்களை அழைத்து,
பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றன,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையருக்கான அலுவலக அறையை வாஸ்து அடிப்படையில் மாற்றம் செய்வதற்காக, இந்த அலுவலகத்தில் ஹோமம் வளர்த்து, பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது.
குறிப்பாக, இந்த ஆணையர் அலுவலகம் புதிதாகக் கட்டப்பட்டு இரண்டாண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், ஆணையரின் அறையை புனரமைக்க மட்டும் ரூ.10 லட்சம் வரை
அரசு பணம் விரையம் செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன. பூஜைகள் முடிந்த பிறகு வழங்கப்பட்ட சிற்றுண்டியும்கூட அரசு செலவில் செய்யப்பட்டுள்ளதும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களாக உள்ளன.
அரசியல் சாசனம் வகுத்துத் தந்துள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிராக ஒரு ஆட்சிப்பணி அதிகாரியின் சுய நலனுக்காக அரசு அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட மதச்

 சடங்குகளை நிறைவேற்றியுள்ளதற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நடந்துள்ளதால், அவர்மீது தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்தக் கடிதம் முடிகிறது.

தற்போது மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக திருமதி. மகேஸ்வரி இ.ஆ.ப. அவர்கள் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.


 வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்