மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 5 பேர் கைது

,வெளியிடப்பட்டது

நன்றி இந்து தமிழ்த்திசை
கடலூர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கீழக்கடம்பூரில் ஒரு விவசாயி தனது மகள்களுடன் வசிக்கிறார். இவரது 3-வது மகள் (17) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
விவசாயி தனது வீட்டருகே உள்ள பூந்தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாலு (53), விநாயகம் (55), ராமலிங்கம் (60), வேல்முருகன் (25), மேலக்கடம்பூர் வீராசாமி (36) ஆகிய 5 பேரும் அந்த தோட்டத்தை பராமரித்து வந்தனர்.
இவர்கள் 5 பேரும் மனநலம் குன்றிய சிறுமிக்கு கடந்த 4 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால், உறவினர்கள் சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமி கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனை யில் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது சகோதரி, சேத்தியாத் தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தினர். வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி, 5 பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறினார். இதையடுத்து, 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்