கால்வாயில் விழுந்த பெண் உயிரிழப்பு

,வெளியிடப்பட்டது

நன்றி இந்து தமிழ்த்திசை
அரக்கோணம் 
அரக்கோணம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் அம்சா (45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அருகில் உள்ள கால்வாயில் அவர் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் நகர போலீஸார் விரைந்து சென்று அம்சாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் கால் தவறி விழுந்ததில் கால்வாய் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். கீழே விழுந்தபோது அவரது தலையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அல்லது அவரது தலையில் யாராவது அடித்து கொலை செய்திருப்பார்களோ? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *