![]() |
|
நன்றி இந்து தமிழ்த்திசை |
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறன் வாக்காளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித்தர வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா உத்தரவிட்டார்.
மாற்றுத்திறன் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது:
மக்களவை தேர்தலில் மாற்றுத்திறன் வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாற்றுத்திறன் வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் அறிமுகப் படுத்தியுள்ள பி.டபிள்யூ.டி எனும் செயலியை பயன்படுத்தி, வாக்குச்சாவடி, அதன் முகவரி, பாகம் எண் உள்ளிட்ட தகவல்களை வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து பெற முடியும். மேலும் வீல்சேர் உள்ளிட்ட உதவி உபகரணங்களை இச்செயலி மூலம் பதிவு செய்து, அவற்றை வாக்களிக்கும்போது பெற்று பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
கூட்டத்தில், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், கோட்டாட் சியர் விஸ்வநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி கலந்துகொண்டனர்.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
Be the first to leave a comment