மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்னை

,வெளியிடப்பட்டது
graphic இந்து தமிழ்த்திசை
நன்றி இந்து தமிழ்த்திசை

சென்னையில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தில் மூத்த கோட்ட மேலாளராக இருப்பவர் கருப்பையா. இவரது மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா, 5 ஆண்டுகளுக்கு முன்பு மர்மக் காய்ச்சலால் உயிரிழந்தார். அவரது பிரிவை தாங்க முடியாத குடும்பத்தினர், சூர்யா பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை ஏழை எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், சூர்யாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி சென்னை அமைந்தகரை யில் உள்ள ஹோப் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறன் குழந்தை கள் மையத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினர். குழந்தைகளுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களான பற்பசை, பிரஷ், சோப்புத் தூள் மற்றும் காய்கறி கள், பழங்கள் வழங்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் அன்ன தானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிஎம்டிஏ முதன்மை திட்ட அதிகாரியாக இருந்த கீதா சாமுவேல் பீட்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற் றார். எல்ஐசி அதிகாரி கருப் பையா, சூர்யா தொண்டு நிறுவன நிர்வாகி திவ்யா, எல்ஐசி வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகசாமி, கண்ணன் பாபு மற்றும் மெர்லின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்