பெரம்பலூர்; உதடு – உள் அண்ணம் பிளவுபட்டோருக்கு நாளை இலவச மருத்துவ முகாம்

,வெளியிடப்பட்டது

நன்றி இந்து தமிழ்த்திசை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் நாளை (மார்ச் 7) காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம்மருத்துவ முகாமில் பிறந்த குழந்தைகள் முதல் 40 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மறு அறுவை சிகிச்சையும் இலவசமாக செய்யப்படும் என மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் திருமால் தெரிவித்துள்ளார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்