நன்றி இந்து தமிழ்த்த்ிசை – மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்

,வெளியிடப்பட்டது

     சென்னை
சென்னையில் நடந்த மாநில அளவிலான் மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டி களில் தமிழகம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற னர்.
சென்னை நேரு உள்விளை யாட்டு அரங்கில் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தமிழகம் முழுவதும் இருந்து 872 மாற்றுத்திறனாளிகள் பங்கேற் றனர். கபடி, இறகு பந்து, கைப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. வீல் சேர் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் இன்று நடை பெற உள்ளது. இன்று மாலையுடன் நிறைவடையும் இப்போட்டியில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர் களுக்கு பரிசுகளும் சான்றிதழ் களும் வழங்கப்பட உள்ளன.
விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் பேசும்போது தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி விளை யாட்டு வீரர்களுக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் அளவுக்கு திறமை உள் ளது.
அவர்களுக்கு நாம் அனை வரும் உறுந்துணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரருக்குள் ளும் ஒரு மாரியப்பன் உள்ளார். எனவே, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்