நன்றி இந்து தமிழ்த்திசை – 2500ஆக உயர்த்தி வழங்கவேண்டும் – மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்:

,வெளியிடப்பட்டது

நாகப்பட்டினம்
மயிலாடுதுறையில் மாற்றுத் திறனாளி கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் டி.கணேசன் தலைமை வகித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்துக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2 ஆயிரம் வழங்குவதை, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.வசந்தா, எம்.சொக்கலிங்கம், வி.பி.முரு கன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை பெறுவோர் பட்டியலில் மாற்றுத்தி றனாளிகளையும் இணைக்கக் கோரி, தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.ஜெபாஸ்டின் தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் டி.வில்சன், பி.முத்துக்காந்தாரி, மாவட்ட செயலாளர் எம்.சாலமன் ராஜ், பொருளாளர் எம்.புவிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின் நலிவுற்றோருக் கான சிறப்பு நிதி உதவி ரூ. 2000 பெறுவோர் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளையும் இணைக்க வேண்டும். அமலில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016-ன் படி 25 சதவீதம் கூடுதலாக ரூ.2500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்தனர்.
 திருச்சி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் பி.குமார், மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில், மாற்றுத்திறனாளி குடும்பங்களையும் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்