நன்றி இந்து தமிழ்த்திசை – தன்னம்பிக்கை இழக்காத மாற்றுத் திறனாளி

,வெளியிடப்பட்டது

தேனி
மாற்றுத்திறனாளி பாலுச்சாமி
மாற்றுத்திறனாளி பாலுச்சாமி
பார்வைக் குறைபாடு, பொரு ளாதாரச் சிக்கல் போன்ற அடுக்கடுக்கான சிரமங்கள் துரத்தி னாலும் தன்னம்பிக்கையுடன் மாவட்ட எல்லைகளைக் கடந்து வருவாய் ஈட்டுகிறார் மாற்றுத் திறனாளி ஒருவர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மலைச்சாமிபுரத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (47). பார்வையிழந்த மாற்றுத்திறனாளி. பிழைப்பிற்காக பத்தி, சாம்பிராணி விற்று வந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன் சாக்கடையில் தவறி விழுந்ததால் நடமாடவே சிரமம் ஏற்பட்டது. பார்த்து வந்த தொழிலும் முடங்கியதால் வறுமையில் வாடினார்.
உழைத்தே பழகிப்போன இவர் அமர்ந்துபார்க்கும் தொழில் குறித்து ஆராயத் துவங் கினார். இதில் உதயமானதே எடை பார்க்கும் தொழில். கைப்பிடியுடன் கூடிய இலகுரக எடை காட்டியுடன் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று அமர்ந்து கொள்வார்.
பென் டிரைவ்வில் பதிவு செய்யப்பட்ட ஒலியை ஸ்பீக்கரில் தவழ விடுகிறார். அக்குரல் பொதுமக்களை எடை பார்க்க அழைக்கிறது. திறன் அற்றது என்று எதுவும் இங்கில்லை. மனம் இருந்தால், எந்த சூழ்நிலையையும் திறன் மிக்கதாய் மாற்றிக் கொள்ளலாம் என்ற அழுத்தம் அக்குரலில் ஈர்க்கிறது. இதைக் கேட்பவர்கள் உடன் காசு கொடுத்து எடை பார்த்துச் செல் கின்றனர்.
தேனி கலெக்டர் அலுவலக கேண்டீனில் மாதம் இருமுறை யாவது தென்படுகிறார்.
அவரிடம் பேசியபோது தெரி வித்ததாவது: பிறவியில் இருந்தே எனக்குப் பார்வை கிடையாது. எனவே பத்தி விற்றேன். தடுமாறி விழுந்ததால் எனது நடக்கும் திறனும் பாதிக்கப்பட்டது. மனைவி பெருமாயிக்கு வலிப்பு நோய் உள்ளது. மகள்கள் அன்னலட்சுமி, முத்துப்பெருமாயி இருவரும் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி படிக்கின்றனர். எடை போடும் தொழில் மூலம் தினமும் ரூ. 100 முதல் ரூ. 150 கிடைக்கிறது. போகும் இடங்களில் சாப்பிட்டுக் கொள்வேன். இத்துடன் சாக்லேட் போன்றவற்றை விற்றால் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் முதல் போட பணம் இல்லை. 30 ஆண்டுகளாக அடுத்தவர்களை எடை போடுவதன்மூலம் குடும்பம் ஓரளவு சிரமம் இன்றி நகர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சிறிய சிரமம் வந்தாலும் துவண்டு விடும் மனிதர்களுக்கு மத்தியில், எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் மாற்றுத்திறனாளி பாலுச்சாமி போன்றவர்கள் பாராட் டுக்குரியவர்கள்தான்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்