நன்றி இந்து தமிழ்த்திசை – பஸ் பாஸ் புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் – ஈரோடு

,வெளியிடப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க 5-ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டிற்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பிக்க வருகிற 5-ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண சலுகை அட்டை அசல், நகல், மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், 3 புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் கலந்து கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளார்.

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்