தேர்தல் ஆணையத்திற்கு நன்றி: துணைச்செயலர் – ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்

,வெளியிடப்பட்டது
சரவணமணிகண்டன்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிரெயிலில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களின் அதிகாரிகளுக்கு நடுவண் தேர்தல் ஆணையம் ஆணை பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் பிரெயில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. இந்நிலையில், நடுவண் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பானது, பார்வை மாற்றுத்திறனாளிகளிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதோடு, பொது மக்களிடம்ம் இது பிரெயில் குறித்தான, பார்வை மாற்றுத்திறனாளிகளின் கல்வி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

மேலும், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெயில் முறையிலான வாக்காளர் அடையாள அட்டை வழங்கிடவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதை ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்கிறது.
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்