செய்தியாக எதிரொளித்த முகநூல்ப்பதிவு:

,வெளியிடப்பட்டது
graphic இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தித்தாள்

இசை ஞானத்தில் சிறந்து விளங்கும் திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி அபினயா குறித்து திறமைக்குக் கைகொடுங்கள்என்ற தலைப்பில் நமது தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஹெளன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைச்செயலாளர் ப. சரவணமணிகண்டன்.
இதன் எதிரொளியாக, நேற்றைய இந்தியன் எக்ஸ்ப்ரஸ் திருச்சி பதிப்பில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இசை ஆசிரியர்ப் பணியிடங்கள் எனத் தலைப்பிடப்பட்டு செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தச் செய்தியில், மொத்தமுள்ள 10 பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில், ஆறில் இசை ஆசிரியர்கள் இல்லை எனவும், அதிலும் புதுக்கோட்டைப் பள்ளியில் இசை ஆசிரியர்ப் பணியிடமே தோற்றுவிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
இயற்கையாகவே பார்வையற்றோர் அதிகம் இசையறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். எனவே அதனை நெறிப்படுத்திப் பயிற்சி அளிக்கும் வகையில் சிறப்புப் பள்ளிகளில் இசை ஆசிரியர்களை நியமிப்பது அவசியமான ஒன்று. மாணவி அபினயா பயிலும் திருச்சி பள்ளியிலேயே, கடந்த 2015 முதல் இசை ஆசிரியர்ப் பணியிடம் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கும் நிருபர், அதுகுறித்து, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. ரவிச்சந்திரன் அவர்களிடம் கருத்துக் கேட்டிருக்கிறார். ஏற்கனவே பணியாற்றிய இசை ஆசிரியர் ஓய்வு பெற்றதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது. துறை வேண்டுமென்றே அதைக் காலியாக வைக்கவில்லை. இந்தப் பணியிடங்களுக்கு பணிநியமனம் செய்யும் அதிகாரம் பெற்றவர் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் என பதிலளித்திருக்கிறார் திரு. ரவிச்சந்திரன்.

செய்தியை ஆங்கிலத்தில் படிக்க:
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
 அடுத்தது: பணமதிப்பு நீக்க பாதிப்பு: கண்ணை மூடிக்கொண்டு வடிவமைத்த பணத்தாள்கள்

பகிர

Be the first to leave a comment

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்