தட்டிக் கேட்டால் வெற்றி நிச்சயம்: – ஓர் அனுபவப் பகிர்வு:

,வெளியிடப்பட்டது

சலுகைக் கட்டணப் பயணச்சீட்டு
கடந்த ஜூலை மாதத்தின் ஒருநாள், காலை 7.30 மணிக்கு புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்குக் கிளம்பினேன். வழக்கம்போல 75 விழுக்காடு பயணச்சலுகைக்காக  என் அடையாள அட்டை நகலை பயணச்சீட்டு தருபவரிடம் நீட்டினேன். நான் ஏறிய பேருந்து நடத்துநர் இல்லாத பேருந்தாம். எனவே முதலில் நேரமில்லை என்ற காரணத்தைச் சொன்ன பயணச்சீட்டு தருபவர், கொஞ்ச நேரத்திலேயே இந்த பஸ்ல இதெல்லாம் செல்லாதுஎன்று சொல்லிவிட்டார்.
அவர் சொன்ன அந்த வாக்குமூலத்தை அப்படியே எனது அடையாள அட்டை நகலில் எழுதித் தந்தால், நான் முழுத்தொகை கொடுத்து பயணச்சீட்டு பெறுவதாகச் சொல்லிப் பார்த்தேன். அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. நேரம் ஆக ஆக எனக்கு எதிராக பொதுமக்களும் கூச்சளிடத் தொடங்கிவிட்டார்கள். இங்கு எவன் உரிமை பறிபோதல் குறித்து எவருக்குக் கவலை? அவர்கள் அவசரம் அவர்களுக்கு.
முழுத்தொகை கொடுத்து பயணச்சீட்டு வாங்கினேன். நடந்ததை பேருந்திலிருந்தபடியே நான் அங்கம் வகிக்கும் புதுகை ரிப்போர்டர்ஸ் வாட்ஸ் ஆப் குழுவான ப்ரேக்கிங் நியூசில் பகிர்ந்தேன். பயணச்சீட்டு மற்றும் பேருந்தை புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு ஒரு நிருபர் சொன்னார். எல்லாம் முடித்து அடுத்தநாள் காலை எல்லாப் பத்திரிக்கைகளிலும் இந்த செய்தி பரபரப்பாக வெளியானது.
நடந்த நிகழ்வு குறித்து புதுக்கோட்டை பணிமனை மேலாளருக்கு கடிதமாக அனுப்பியும் மறுகடிதம் அத்தனை மலுப்பலாக இருந்தது. அத்தோடு அந்த பிரச்சனையின் தீவிரம் என்னைக் கைவிட்டது.
இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. இன்று காலை அதுபோல நடத்துநர் இல்லாப் பேருந்து ஒன்றில் என் மனைவி பயணம் செய்திருக்கிறார். இதுலலாம் ஏறக்கூடாது, இதுல பாஸ் செல்லாதுஎன்று சொல்லிக் கொண்டே, 75 விழுக்காடு சலுகைக் கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கியிருக்கிறார்கள். மேலே அன்தப் பயணச்சீட்டு நகல் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும்  இந்தப் பயணச்சீட்டு நகலைத் தரவிறக்கிக்கொள்ளுங்கள். நடத்துநரில்லாப் பேருந்துகளில் இதுபோன்ற இடர்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தால், இந்த பயணச்சீட்டின் மாதிரி உங்களுக்கு உதவும்.
எக்காலத்திலும் உங்களின் நியாயமான கோரிக்கைகளைப் போராடிப் பெறத் தயங்காதீர்கள். ஏனெனில், நாம் நமக்காக மட்டும் போராடவில்லை. நமது சமூகத்திற்காகவும் தான் என்பதை உணருங்கள். தட்டிக் கேட்டால் வெற்றி நிச்சயம்.
முந்தையது
*
 அடுத்தது
பகிர

2 thoughts on “தட்டிக் கேட்டால் வெற்றி நிச்சயம்: – ஓர் அனுபவப் பகிர்வு:

  1. உரிமை மறுக்கப்படும் போது போராட்டம் மட்டுமே வெற்றியை பெற்றுத்தரும்

உங்கள் கருத்தை உள்ளிடுங்கள்